உலகின் மிக அழகான ஆசிரியர் இவரா? வைரலாகும் புகைப்படங்கள்

223

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஆசிரியை ஒருவரை உலகின் மிக அழகான ஆசிரியை என இணைய பயன்பாட்டாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஷ்யாவின் மின்ஸ்க் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார் Oksana Neveselaya என்பவர். இவரது புகைப்படங்கள் தான் தற்போது வைராக இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளது.

இணைய பயன்பாட்டாளர்கள் இவரை உலகின் மிக அழகான ஆசிரியை என்று கொண்டாடி வருகின்றனர். தன்னை உணர்ச்சி மிகுந்தவர் என கூறிக்கொள்ளும் இவருக்கு குறிகிய காலத்திலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இணையத்தில் உள்ளனர்.

மிக கடினமான பாடம் என்று கருதப்படும் கணித பாடத்தை Oksana மிக எளிதாக அனைவருக்கும் புரியும்படி கற்றுத்தருவதாக அவரது வகுப்பு மாணவர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

இவர் வகுப்பெடுக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானதை அடுத்து இணையத்தில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 173,000 ரசிகர்கள் உள்ளனர்.

இவர் மாணாக்கர்களுக்கு கணிதம் சொல்லித்தரும் அழகை வீடியோ எடுத்துள்ள ஒரு மாணவர் தற்போது அதை வெளியிட்டுள்ளார்.

குறிப்பிட்ட இந்த ஆசிரியரின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்த ஒருவர், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் வருகை 3,000 மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடுகிறார்.

SHARE