தற்போது மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவராவார். சாதாரணமாக ஒரு நடிகை, ஒரே நடிகருடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்து விட்டாலே அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் புகைந்து விடும்.
அந்த வகையில், சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், பின்னர் ரெமோ படத்திலும் நடித்துள்ளார். தற்போது அப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சதீஷ்க்கும், கீர்த்தி சுரேஷ்க்கும் காதல் என தகவல்கள் பரவி வருகின்றன. இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகவும், அத்திருமணத்திற்கு சதீஷன் அம்மா வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.