
விஜய் தற்போது ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். பரதன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
மேலும், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன், பேபி மோனிகா, சதிஷ், அபர்ணா வினோத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது இன்னொரு நடிகையும் இப்படத்தில் இணையவிருக்கிறார். இவர் ‘கோழிக்கூவுது’, ‘மாதவனும் மலர்விழியும்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த சிஜா ரோஸ், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘றெக்க’ படத்தில் அவருக்கு அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.