ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு அரசாங்க மருத்துவர்கள் வரவேற்பு!

206

057-1140x798

உயர்நிலை இராணுவத்தினரைப் பாதுகாக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

சீஐடி, எப்சீஐடி மற்றும் லஞ்ச ஊழல்கள் எதிர் ஆணைக்குழு ஆகியன அரசியல் நோக்கில்செயற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதியின் குறித்த நிலைப்பாடு, சுயாதீனக்குழுக்களின் செயற்பாட்டுத் தன்மையை அர்ப்பணிப்பை உணர்த்துகிறது என்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச்செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்ட படையினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து அவர்களுக்கு உரிய கௌரவத்தை அளித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் நிலைப்பாடு, குறித்த நிறுவனங்களின் இறைமையை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் ஹேரத் நேற்று ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

SHARE