மட்டக்களப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நகை திருட்டு வழக்கில் எதிரிக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி மா.கணேசராஜா அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 20.08.2014 ம் ஆண்டு மட்டக்களப்பு, பூம்புகார் நகர், 07ம் குறுக்குத்தெரு எனும் விலாசத்திலுள்ள ஜோசம் ரெக்சானாவுக்கு செந்தமான ரூபா 20000/= பெறுமதியான நகை களவாடப்பட்டிருந்தது.
இத்திருட்டு சம்பந்தமாக அதே இடத்தைச் சேர்ந்த தர்மதேவா -ராஜ்குமார் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில்,குறித்த திருட்டு சம்பந்தமான வழக்கில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் நேற்று வியாழக்கிழமை, எதிரியான தர்மதேவா ராஜ்குமார் என்பவருக்கு ஒரு வருட கடூழிய சிறையும் ரூபா 20000/= தண்டப்பணமும் விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா தீர்ப்பளித்துள்ளார்.