நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது குழந்தை பலி. பெற்றோரின் அலட்சியம் காரணமா?

212

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் லூசெர்ன் மாகாணத்தில் உள்ள Allmend என்ற நகரில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரத்தில் 4 வயது ஆண் குழந்தைக்கு நீச்சல் கற்பிக்க பெற்றோர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பயிற்சி நீச்சல் குளமான அப்பகுதியில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் இல்லாத நேரத்தில் நீச்சல் குளம் அருகே எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 4 வயது ஆண் குழந்தை சிக்கி நீச்சல் குளத்தில் மூழ்கியுள்ளது.

குழந்தையை காணாமல் பெற்றோர் தேடியபோது தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தையை கண்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

குழந்தை உயிருக்கு போராடிய நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரண்டு தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் உடல்நிலை நேற்று மிகவும் மோசம் அடைந்ததால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானது.

நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது தொடர்பாக பெற்றோருடன் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE