ரஷ்யாவை சேர்ந்த ஏரோபிளாட் (Aeroflot) விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஏரோபிளாட் 2381 என்ற பயணிகள் விமானம் 115 பேருடன் ஜெனிவாவில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவரால் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பயணிகளை வெளியேற்றிய அதிகாரிகள், விமானத்தை தனிமைப்படுத்தி வெடிகுண்டு சோதனை குழுவை வைத்து சோதனை செய்தனர். ஆனால் விமானத்தில் வெடிக்குண்டு ஏதும் இல்லை.
இதைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரஷ்ய நபரை அதிரடியாக கைது செய்த பொலிசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதே போன்று கணவனையும், அவரது கள்ள காதலியையும் பழி வாங்க விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பிய பெண்ணுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், 92,000 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.