நோர்வூட்டில் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

202

கைச்சாத்திடப்படவுள்ள சம்பள கூட்டு ஒப்பந்த உடன்படிக்கைககு எதிர்ப்புத் தெரிவித்து பொகவந்தலாவ அட்டன் பிரதான வீதியின் நோர்வுட் வெஞ்சர் பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

14.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 10 மணியளவில் மக்கள் விடுதலை முன்னனியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் அட்டன் பொகவந்தலாவ பலாங்கொடை பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டது.
தேர்தல் காலத்தில் ஆயிரம் ருபாய் சம்பளம் பெற்றுத்தருவதாகக் கூறி இன்று 730ரூபாய் சம்பளத்திற்கு ஒப்பமிட்டு தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். கடந்த 18 மாதங்களாக இழுபறி நிலையிலிருந்த சம்பளவுடன் படிக்கை தொழிலாளர்களின் நாடு தழுவிய போராட்டங்களின் பின் இன்றையதினம் 730 ரூபாய் சம்பள அடிப்படையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்படவுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர்களைக் காட்டிக்கொடுக்காதே, 730 ரூபாயில் வாழ்க்கைச் செலவைக் கொண்டு நடத்தமுடியுமா? தேர்தல் கால வாக்குறுதிகள் என்ன ஆனது என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டமை குறிப்பிடதக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-1

unnamed-1

unnamed-3

unnamed-5

unnamed-4

unnamed-2

SHARE