சரணடைந்த 600 பொலிஸாரின் படுகொலை…!!-கருணாவிற்கு கடைசி களுத்தறுப்பு

458

 

செப்டம்பர் 21, 2016 ‘ஐலன்ட்’ நாளிதழில் திவங்க பெரேரா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்? 600 (பொலிஸாரின்) விதவைகளின் தற்போதை நிலை என்ன என்பதே அந்த கேள்வி.

k1uk1z

அந்தக் கட்டுரையின் ஏனைய பகுதிகள் பதிலளிக்கும் அளவிற்கு தரமானவையல்ல. ஆனால், இந்தக் கேள்வி பதில் அளிக்கவேண்டிய கேள்வி.

எங்கள் தீவின் தசாப்தகால வன்முறைகளின் போது விடுதலைப்புலிகள், அரசாங்கம், ஆயுதகுழுக்கள் உட்பட மோதலில் ஈடுபட்ட பல தரப்புகள் அட்டுழியங்களில் ஈடுபட்டுள்ளன.

இந்த அட்டுழியங்களில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினரின் பரிமாணங்கள் குறித்து மதிப்பிடுவதற்கு நான் முயலமாட்டேன். அவைகள் ஒவ்வொரு கொடுமையிலிருந்து மற்றைய கொடுமைக்கு இடையில் வேறுபட்டவையாக காணப்படுகின்றன.

drinkbitch images lttekaruna2

எனினும், 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதன்மை குற்ற நிலையானது விவாதத்துக்கு இடமின்றி விடுதலைப்புலிகளே.

இந்தச் சம்பவம் இடம்பெற அறியாமலேனும் இடமளித்தமைக்காகவும் இரண்டாவது குற்ற நிலை அரசாங்கத்தில் தங்கியுள்ளது.

அதேவேளை, விரிவான விசாரணையொன்றுக்கு அழுத்தங்களை கொடுக்காதமைக்காக நாங்கள் மூன்றாவது குற்றவாளியாகின்றோம்.

பல அட்டுழியங்களிற்கு காரணமாகக் காணப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணிகளும், ஏனைய அநீதிகளின் எதிர் எதிர் பக்கத்தில் காணப்பட்ட கட்சிகள் இடையே மூடிமறைப்பதற்காக இடம்பெற்ற நடவடிக்கைகளும் யுத்த நடந்த காலத்தின் வன்முறை வழிபாட்டின் ஒரு சுவாரஸ்யமான அம்சமாக காணப்படுகின்றது.

மில்லியன் கணக்கான மக்கள் வன்முறையை ஏற்றுக்கொள்வதில் காட்டிய அக்கறையின்மையும் செயலற்ற தன்மையும் இன்னொரு சுவாரஸ்யமான விடயம்.

இந்தக் கொடுமைகள் பெருமளவிலானவை, மிக நீண்ட பட்டியலை கொண்டவை, இவை உட்பட,

• கிழக்கின் பல இடங்களில் ஆயுதப்படையினர் அல்லது அரச ஆதரவுடனான முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழர்களிற்கு எதிராக மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை.

• காத்தான்குடி, ஏறாவூர் உட்பட பல இடங்களில் முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை, அரசாங்கம் இதில் தலையிடாமை அல்லது பின்னராவது விசாரணையை மேற்கொள்ளாமை.

• 1990இல் அரசாங்கத்தின் துணையுடன் வட பகுதியின் முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் ஒட்டுமொத்தமாக இனச்சுத்திரிகரிப்பு செய்யப்பட்டமை.

திவங்க பெரேரா தெரிவித்த சம்பவம், ‘தலைவரின் உத்தரவின் பேரில் பிராந்திய தளபதியால் 600 பொலிஸார் ஈவிரக்கமற்ற விதத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.

 

ஆம், கருணா அம்மான் கடந்த அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் அதிஷ்டசாலியானார். மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவரானார்.(உண்மையில் இது அதிஸ்டமல்ல, சந்தர்ப்பவாதம்).

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மீது பல கொலைவெறித் தாக்குதல்கள் இடம்பெற்றன. பௌத்த வழிபாட்டு தலங்கள் பல அழிக்கப்பட்டன. கலாநிதி ராஜன் ஹூலின் முறிந்த பனை – ராஜனியிலிருந்து யுத்த முடிவு வரை  என்ற நூலில் இது குறித்த பல விடயங்கள் உள்ளன.

600 பொலிஸாரின் படுகொலை குறித்த முக்கியமான விடயம் என்னவென்றால், அவர்கள் சிங்களவர்களாகயிருந்த போதிலும், அரசாங்கத்தின்   உத்தரவின் பேரில் சரணடைந்த  போதிலும், அதன் பின்னரே அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

முன்னெப்போதும் நடந்திராத இந்தக் குற்றம் குறித்து இதுவரை பகிரங்க விசாரணை எதுவும் இடம்பெறவில்லை. படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் உணர்வுகள் கூட ஒடுக்கப்பட்டுள்ளன, மறைக்கப்பட்டுள்ளன. இது எங்கள் தேசத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் பரிதாபநிலையை வெளிப்படுத்துகின்றது.

அந்த படுகொலைகளில் இருந்து உயிர் தப்பிய பொலிஸ் உத்தியோகத்தர்   ஒருவரின் கதை மீண்டும் சொல்வது  பெறுமதியானது.

அந்தச் சம்பவத்தின் போது தனது தலையை உரசிச்சென்ற துப்பாக்கி குண்டு குறித்தும் தான் இறந்துகிடந்த பொலிஸார் நடுவில் வீழ்ந்துகொல்லப்பட்டவன் போல் நடித்ததையும் அவர் நினைவுகூறுகின்றார்.

இறந்தது போல நடித்தன் காரணமாக அவர் இரண்டாவது துப்பாக்கி ரவையை தவிர்த்துக்கொண்டார். மிக நீண்டநேரத்தின் பின்னர் புலிகள் அங்கிருந்து சென்ற பின்னர் அவர் வெளியேறி யாராவது உதவுவார்களா என பார்த்துள்ளார்.

அவ்வேளை அவர் தமிழ் குடும்பமொன்றின் தோட்டத்திற்குச் சென்றுள்ளார், அவர்கள் என்ன செய்வார்களோ என்பது தெரியாத நிலையிலும் அவர் தனக்கு நடந்ததைத் தெரிவித்துள்ளார்.

அதிஷ்டவசமாக அவர்கள் துணிச்சல் மிக்கவர்களாகவும், இரக்ககுணம் கொண்டவர்களாகவும், உதவும் குணம் கொண்டவர்களாகவும் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் குளிப்பதற்கு உதவி செய்துள்ளதுடன், இராணுவ சீருடைய மாற்றுவதற்கும் உதவியுள்ளனர்.

அவருடைய தனது பொலிஸ் சீருடையை எரிக்கவும் உதவியுள்ளனர். இரண்டு நாட்கள் தங்களுடன் தங்கவைத்து உணவும் பாதுகாப்பும் அளித்த பின்னர் அருகிலிருந்த இராணுவ காவலரணிற்கு வழிகாட்டியுள்ளனர். அவர் அந்த காவலரணில் இருந்தவர்களிடம் தனது அனுபவத்தைக் கூறியுள்ளார்.

அதிஷ்டவசமாக டச் (போர்த்துக்கேய) மிசனரியைச் சேர்ந்த லொரி ஒன்றில் பென் பாவின்க் என்பவர் அங்கு வந்துள்ளார். மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு முக்கிய பொருட்களை வழங்கிவிட்டு அவர் கொழும்பு திரும்பிக்கொண்டிருந்தார்.

பென், காயமடைந்த முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் கொழும்பிற்கு கொண்டு செல்ல இணங்கியிருந்தார். பென்னிடம் முழுக் கதையையும் கூறிய பொலிஸ் உத்தியோகத்தர் பலாங்கொடை பகுதியில் வைத்து லொறியிலிருந்து இறங்கியிருக்கிறார்.

பென் முழு கதையையும் என்னிடம் (கட்டுரையாளர்) தெரிவித்தார்,  ஆனால், தனது நாட்குறிப்பின் தொகுக்கப்பட்ட ஆங்கில வடிவத்தில் இந்தப் படுகொலை குறித்து அவர் சில குறிப்பீடுகளையே செய்திருக்கிறார்.

குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தரையும் அவரை பாதுகாத்த தமிழ் குடும்பத்தையும் பாதுகாப்பதற்காகவே அவர் அவ்வாறு செயற்பட்டிருக்கலாம்.

பென்னின் இலங்கையின் மோதல் குறித்த பல தகவல்கள் அடங்கிய நாட்குறிப்பின் தமிழ் வடிவத்தை விஜிதா யாப்பாவும், ரஜினி திராணகம நினைவுக்குழுவும் 2011இல் வெளியிட்டன.

இந்தப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை தற்போதும் நியமிக்கலாம், இன்னமும் அதற்கான காலம் உள்ளது.

nesiah-e1476432197722-150x150 சரணடைந்த 600 பொலிஸாரின் படுகொலை...!! - கலாநிதி தேவனேசன் (கட்டுரை) nesiah e1476432197722

“The Murder of 600 Policeman” என்ற தலைப்பில் கலாநிதி தேவனேசன் நேசையாவால் எழுதப்பட்டு ‘க்ரவுண்விவ்ஸ்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

SHARE