ஆயுதகட்சிகளுக்கு வக்களத்து வாங்கி கேள்வி கேட்டவர்களுக்கு மாவைசேனாதிராசா கொடுத்த சாட்டை அடி வவுனியா தமிழரசு கட்சி அலுவலகத்தில் மக்கள் சந்திப்பின் போது

275

 

ஆயுதகட்சிகளுக்கு வக்களத்து வாங்கி கேள்வி கேட்டவர்களுக்கு மாவைசேனாதிராசா கொடுத்த சாட்டை அடி வவுனியா தமிழரசு கட்சி அலுவலகத்தில் மக்கள் சந்திப்பின் போது


வடமாகாண சபையிலும் கூட்டமைப்பின் மத்தியிலும் குழப்பங்களை ஏற்படுத்துபவர் சுமந்திரன் தான் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?இது அபாண்டமான குற்றச்சாட்டு விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்தது நான் தான் அப்போது அவரை எதிர்த்தவர்கள் இன்று சம்பந்தம் கொண்டாடுகிறார்கள்

வவுனியாவில் தமிழ் அரசு கட்சியினரின் கூட்டம் இன்று 16-10-2016 வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “முடியும் என்றால் முடியும், முடியாது என்றால் முடியாது” என எம்மால் பதிலளிக்க முடியுமென எதேச்சதிகாரமாக பதில் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்,

அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் யாழில் எடுத்த வாக்குகளையே, எடுக்க முடியாத “அவர்கள்” (கஜேந்திரகுமார், சுரேஷ்) “எழுக தமிழ்” நடத்தியதால் என்ன சாதித்தார்க? எனவும்,

சர்வதேச விசாரணை ஏற்க்கனவே நடைபெற்று முடிந்து விட்ட்து என்றும், இதுவரையில் உலகத்திலேயே நடந்த தரமுயர்ந்த சர்வ்தேச விசாரணை அதுவென்றும் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்,

என்னைக் கொலை செய்து விட்டால் பிரசினை தீர்ந்து விடுமா? எனவும், பொறுமை காக்க உங்களால் முடியாதா? எனவும் வினவினார்.

மேற்படிக் கூடடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உட்பட தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து இருந்தனர்.

 

 

SHARE