அட்டன் போடைஸ் தோட்டத்தில் 70 லட்சம் நிதியோதுக்கீட்டில் சிறுவர் அபிவிருத்தி நிலையம்

247

அட்டன் போடைஸ் தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலைய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் அவர்கள் கடந்த 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை நாட்டிவைத்தார்.

உலக வங்கியில் 10 மில்லியன் நிதியுதவியில் பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் சிறுவர் அபிவிருத்தி நிலையமானது அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களின் தலைமையில் நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றது.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் போடைஸ் தோட்டத்தில் 70 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர்கள் கல்வி பயிலும் அறை, நித்திரை கொள்ளும் அறை, பாலூட்டும் அறை, மலசலகூடம், விளையாடும் அறை உட்பட சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் என சகல வசதிகளையும் கொண்ட 40 பேர்ச் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது. அடிக்கல் நாட்டும் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், சிங்பொன்னையா, பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமனி . நகுலேஸ்வரன் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed

unnamed-2

unnamed-1

unnamed-3

SHARE