சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி இன்று(17)காலை மன்னாரில் மக்கள் பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு மன்னார் நகர பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் சமாதான அமைப்பின் அனுசரனையுடன் இடம்பெற்றுள்ளது.
மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் மன்னார் பிரதான பால நுழைவாயிலில் இருந்து ஆரம்பமான பேரணி மன்னார் பஸார் பகுதியூடாக மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்துள்ளது.
இதன் போது நூற்று கணக்கானவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.அத்தோடு நகர சபை மண்டபத்தில் வறுமை ஒழிப்பு தொடர்பாக விழிர்ப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றுள்ளது.
இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ, மன்னார் சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் உதயகுமார், அரச சார்பற்ற ஒன்றியத்தின்தலைவர் செல்வாநந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டு சர்வதேச வறுமை ஒழிப்பு தொடர்பில் உரை நிகழ்த்தியுள்ளனர்.
மேலும் சமுர்த்தி அதிகாரிகள், சமூர்த்தி பயனாளிகள் என நூற்றுக்கனக்காணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.