இலங்கைக்கு உதவுவதற்கு நாம் தயாராக இருப்பதாக ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர்புட்டின் தெரிவித்துள்ளார்.
இந்தியா – கோவாவில் இடம் பெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே ரஸ்யாவின் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ரஸ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.