தனது ஆட்சிக்காலத்தில் இருந்த சமய ரீதியான புத்துணர்ச்சி தற்போது குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை லுணுகம்வெஹர பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும், நல்லிணக்கம் என்பது ஒரு பக்க சார்பாக கட்டியெழுப்ப முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.