தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 126 திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
அந்த வகையில், வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 24 திட்டங்களுக்கு 27 இலட்சமும் வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 19 திட்டங்களுக்கு 31 இலட்சமும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 18 திட்டங்களுக்கு 20 இலட்சத்து எழுபத்தையாயிரமும் ஒதுக்கியுள்ளார்.
மேலும், செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் 27 திட்டங்களுக்கு 24 இலட்சத்தி இருபத்தையாயிரமும் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 06 திட்டங்களுக்கு 17 இலட்சமும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 06 திட்டங்களுக்கு ஆறு இலட்சத்து ஐம்பதாயிரமும் ஆரையம்பதிப் பிரதேச செயலாளர் பிரிவில் 02 திட்டங்களுக்கு 02 இலட்சமும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 12 திட்டங்களுக்கு 12 இலட்சத்து இருபத்தையிரமும் வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 10 திட்டங்களுக்கு 06 இலட்சமும், பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 02 திட்டங்களுக்கு 02 இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலய புனரமைப்பு மற்றும் பொருட்கள், பாடசாலை புனரமைப்பு மற்றும் பொருட்கள், கிராம அபிவிருத்திச் சங்க புனரமைப்பு மற்றும் பொருட்கள், பொது வேலைகள் என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்குறிப்பிட்டுள்ளார்.