சம்பளப்போராட்டத்திற்கு ஆதரவாக ஆலையடிவேம்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

224

மலையக தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா கோரும் நியாயமான சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடி வேம்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு கால்நடை பாலுற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

265 தமிழ், முஸ்லிம் பாலுற்பத்தியாளர்கள் இச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள்.

அங்கு சங்கத்தலைவர் அழகையா முருகன் செயலாளர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசா உள்ளிட்டோர் பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் முடிவில் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சர் வரை அனுப்பவுள்ளதாக செயலாளர் சோ.புஸ்பராசா தெரிவித்துள்ளார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90

SHARE