விவசாய முன்னேற்றத்திற்கு எத்தனையோ புதிய புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, களம் இறங்கியுள்ளன.
அப்படிப்பட்ட தொழில் நுட்பங்களால்தான் மக்கள் பெருக்கத்துக்கு ஈடுகொடுத்து விவசாயமும் சமாளிக்கிறது.
அதுபோன்ற ஒரு வளர்ச்சிதான் பிரிட்டனின் நிறுவனம் ஒன்று முதன்முதலாக கண்டுபிடித்திருக்கும் ஓட்டுநர் இல்லாத டிராக்டர்.
இது துல்லியமான உருவாக்கத்தால், எந்த இலக்கிடமும் ஒரு அங்குலம் வரை நெருங்கிச் செல்ல முடிந்தது.
இது பிரிட்டனின் நிலப்பரப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டனில் உள்ள நிலங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இந்த டிராக்டரை பிரிட்டனில் உள்ள எல்லா விவசாயிகளும் பயன்படுத்தினால் அங்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கூடுதலாக விவசாய நிலமாக மாற்றலாம். என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் படைப்பாளிகள், மக்கள் பெருக்கத்துக்கு தேவையான உணவு உற்பத்திக்கு நிலத்தை உழுது பண்படுத்துவது அவசியம். அதை எளிதாகவும் விரைவாகவும் செய்து முடிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.
இது சீக்கிரத்திலே மற்ற நாடுகளுக்கும் பரவும். விவசாயிகளின் வேலையை குறைக்கும் விளைச்சலை பெருக்கும்.