பிரித்தானியாவில் நடந்த கணிதம் தொடர்பான வினாடி-வினா நிகழ்ச்சியில் ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்ற நபரை 12 வயது சிறுவன் திணறவைத்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்கான சிறப்பு கணித மேதை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஆக்ஸ்போர்டு கல்லூரியில் பட்டம் பெற்ற Rachel Rile என்ற பெண் அழைக்கப்பட்டிருந்தார்.
இவர் தலைமையிலான ஒரு குழுவும், சிறுவர்கள் தலைமையிலான குழுவும் ஒன்று இருந்தது. இதில் Rachel Rile வும் David என்ற 12 வயது சிறுவனுக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது.
David தன்னுடைய 9 வயதில் GCSEயில் கணிதம் தொடர்பாக தேர்ச்சி பெற்றவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டியின் விதிமுறைப்படி ஒவ்வொரு ஜோடிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 தசம எண்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றிற்கும் மாற்று எண் கொடுத்து நாக் அவுட் முறையில் போட்டி நடைபெற்றது.
போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது ஒரு கேள்விக்கு சிறுவன் 5 என்று பதில் அளிக்க, அடுத்து Rachel 9 என்ற பதில் அளிக்க, அடுத்த நொடியே அதற்கான பதிலை சிறுவன் 2 என பதில் கூற, அதற்கு அடுத்த பதிலை Rachel கூறமுடியாமல் திணறினார். அதன் பின் சற்று யோசித்து 5 என பதில் கூறினார்.
ஆனால் அதற்கான பதில் 6 என அறிவிக்கப்பட்டது. ஒரு 12 வயது சிறுவன் ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்ற பெண்ணை வீழ்த்திய சம்பவம் அங்கிருந்தோரை மெய்சிலிர்க்க வைத்தது.