பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

211

உலக உணவு தினத்தை முன்னிட்டு இறுதி நாளான இன்று புதிய லிபரல் பொருளாதார திட்டங்களை தோற்கடிப்போம் மற்றும் உணவு தன்னாதிக்கத்துக்காக ஒன்று திரள்வோம்! என்னும் தொனிப்பொருளில் மக்கள் பாத யாத்திரை பொதுகூட்டம் கொழுப்பு விகார மகாதேவி பூங்கா வெளியரங்களில் இடம்பெறுகின்றது.

இந்த மாபெரும் மக்கள் யாத்திரைக்கு இலங்கையின் 14 மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தற்போது இந்த உணவு தன்னாதிக்கம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இன்று குறிப்பாக வடக்கு கிழக்கு தெற்கு மலையகம் போன்ற இடங்களில் வளங்கள் சூறையாடப்படுகின்றன. இவை அனைத்தும் சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.
இந்த நல்லாட்சி அரசாங்கமும் சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தனது ஆட்சியை நடத்துகின்றது. இதற்கு இடமளிக்க முடியாது என்பதுடன் இவற்றுக்கு எதிராக போராடும் நோக்குடனே இந்த மாபெரும் மக்கள் யாத்திரை இடம்பெறுகின்றது.

இதனை அடுத்து ஒன்று திரண்ட மக்கள் சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களுக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்இன்று முன்னெடுக்கப்படுள்ளது.

அண்மைக்காலமாக சட்ட விரோதமான சுருக்கு வலை, தங்குசு வலை, லைலா வலை, வெடிபொருட்கள், இந்தியன் இழுவை படகு போன்றவற்றை உடனடியாக தடைசெய்யவேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 18 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டதுடன் இந்த மாபெரும் மக்கள் பேரணியை மோன்லார் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் சேர்ந்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed-5

unnamed-1

unnamed-2

unnamed-3

unnamed-4

unnamed-6

SHARE