வித்தியா கொலை வழக்கு யாழ் நீதிமன்றில் இல்லையா? தொடரும் விளக்கமறியல்

203

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் அடுத்த மாதம் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் படுகொலை வழக்கு இன்று (18.10.2016) செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது சந்தேகநபர்களான 12 பேரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-2

மேலும் குறித்த சந்தேக நபர்கள் 12 பேரும் இன்று நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இருப்பினும் வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு, இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென நீதிபதி தெரிவித்திருந்தார்.

எனினும் வித்தியா படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேல் பூர்த்தியாகியும் இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை, என்றும் புலனாய்வு பிரிவினர் மந்த கதியில் செயற்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE