திருகோணமலை – தோப்பூர் 59ஆம் கட்டை பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்று இன்று(18) காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.
சம்பவத்தில் பொலன்னறுவையைச் சேர்ந்தஇருவரே படுகாயமடைந்துள்ளதாக தோப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த வண்டி பாதையில் சென்று கொண்டிருக்கையில் அதன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததாலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், படுகாயமடைந்த நபர்கள் தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.