மகாவலி சிறந்த விவசாயி மற்றும் 2016 ஆம் ஆண்டு சிறந்த விவசாய சங்கத்திற்கு தாய்லாந்து செல்வதற்கான விமானச்சீட்டு

248

மகாவலி சிறந்த விவசாயி மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாய சங்கங்களைச் சேர்ந்த 18 பேர்களுக்கு தாய்லாந்தில் நடைபெறும் கூட்டெருவைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது தொடர்பான ஐந்து நாள் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து செல்வதற்கான விமானச்சீட்டுக்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

கூட்டெருவைப் பயன்படுத்துவதற்கு மகாவலி விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்குடன் ஜனாதிபதி அவர்களின்ளு முன்மொழிவுக்கேற்ப இந்த விவசாய கருத்தரங்கில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன்இ அரசாங்க திரைசேரியிலிருந்து இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யாது அனுசரணையாளர்களின் பங்களிப்பினூடாக இதற்கான நிதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் அநுர திசாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

18.10.2016

president_maithripala_sirisena

SHARE