KPL-T 20 துடுப்பாட்ட போட்டி ஓர் வரலாற்று பதிவாக திகழ்கிறது – சிறீதரன் எம்.பி புகழராம்

233

sritharan-mp

பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி கிளிநொச்சி மண்ணில் வடக்கு மாகாணங்களின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களையும் இணைத்து கிளிநொச்சி துடுப்பாட்டச்சங்கம் நடாத்தும் KPL-T 20 போட்டி உண்மையில் ஒர் வரலாற்று பதிவாக திகழ்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எம்.பி கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கம் காவேரிக்கலாமன்றம் மற்றும் Vanni Hope ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் நடாத்தும் KPL-T 20 போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய மாவட்டத்தில் முதன் முறையாக பல்வேறுபட்ட தடைகளை தாண்டியும், பல்வேறுபட்ட இன்னல்களை தாண்டியும் இந்த மண்ணில் வரலாற்றின் சாதனையாக இவ்வாறான போட்டிகளை நடாத்துவது மிகவும் கடிமானகும்.

இவ்வாறான போட்டிகளூடாகவே எங்களுடைய இளைஞர்களின் திறமைகளை இனங்காணக்கூடியதாக இருக்கின்றது. 2002ம் ஆண்டுக்கு பின்னர் இப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் KPL-T 20 போட்டி விளையாட்டு வீரர்கள் மத்தியில் புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துடுப்பாட்ட போட்டி பல்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு விதமாக நடாத்தப்படுகிறது. ஆனால் முதன் முதலாக எங்களுடைய மாவட்டத்தில் வித்தியாசமான முறையில் வடக்கு மாகாணத்தின் நட்சத்திர வீரர்களை இணைத்து நடாத்துவதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன்.

வீரர்களுடைய மனநிலைகளும், உங்களுடைய ஊக்கமும் ஆக்கமும் இந்த மண்ணில் பாரிய மாற்றத்தை தரவேண்டும். எங்களாலும் முடியும், வரலாற்றில் நாங்களும் சாதிப்போம், என்ற உத்வேகத்துடன் இந்த விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த முறை கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச்சங்கம் வடக்கு கிழக்கு இணைந்த போட்டியாக நிச்சயம் நடாத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE