புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சமதான நீதிவான் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் மதுபானப் போத்தல்களால் தாக்குதல்.

205

யாழ். கல்வியங்காடு  புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சுப்பிரமணியம் நமசிவாயம் என்பவரின்  வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால்( 18) நேற்று இரவு 9.00 மணியளவில் மதுபானப் போத்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு சுப்பிரமணியம் நமசிவாயம்  சமதான நீதவான்  வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் தெரியவருவது

இத் தாக்குதல் சம்பவம் ஒரு மாத காலமாக இடம்பெற்று வருவதாகவும் இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் (21-09-2016) முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது .

இது தொடர்பில் பொலிஸாரினால் எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வயது முதிர்ந்த எம்மால் நிம்மதியாக இருக்க முடியவில்லை . தொடர்ச்சியாக சாராய போத்தல்களால் வீட்டின் முன்னால் எறிந்துடைத்து விட்டு தப்பிச்செல்கிறார்கள்  இந்த விடயத்தில் கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வீட்டின் உரிமையாளர்  தெரிவித்திருந்தார்.
இச்சம்பவம்  தொடர்பாக  சமதான நீதவான் பல முறை  அயலவர்களுக்கு கூறிவந்திருந்தார் . நேற்றைய தினம்  நாய்க்கு சாப்பாடு வைக்க வீட்டிற்கு வெளியே  வந்திருந்த தருணத்தில்  போத்தல்கள் வீசும் சத்தம் கேட்டதாகவும் யாரே ஒருவர் ஒடுவது போன்று தெரிந்ததாகவும்  தான் பயத்தில் உள்ளே ஒடிச்சென்று வீட்டின் கதைவைப்புட்டி விட்டதாகவும் சம்பவத்தை பார்வையிட்ட  நபர் தெரிவித்திருந்தார்.
img_6041-copy-670x377 img_6046-copy-670x377
SHARE