அட்டன் கொழும்பு பிரதான வீதியில் சிறிய ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சிறு காயங்களுக்குள்ளானார்.
அட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மல்யப்பூ பகுதியிலே 19.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 8.00 மணியளவில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
தவறான வழியில் எதிரே வந்த லொறிக்கு இடங்கொடுக்க முற்பட்டபோதே பாதையோர மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தகவலும் படங்களும்:-
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்