வாகன விபத்தில் உயிரிழந்த நடிகையின் உடல் இன்று நல்லடக்கம்

210

download-1

வாகன விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகை கவீஷா அயேஷானியின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் மில்லதே கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

தற்போது வரையில் அவரது உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பல நடிகைகள், நடிகர்கள் உட்பட பல கலைஞர்கள் அஞ்சலி செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிதிவெல, போகஹாவத்தை பிரதேசத்தில் அவரது வீட்டில் இருந்து இன்று மாலை 3 மணியளில் அவரது சடலம் கல்லறைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

1991ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி பிறந்த அவர் கடந்த 16 திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது வரையில் இவரது மரணம் தொடர்பில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE