மன்னார் முசலி பிரதேச பகுதியில் இன்று ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை அடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
குறித்த பகுதியில் இன்று இரவு ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து அங்கு பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் அண்மைய நாட்களில் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த ஒருவரை இன்று பொது மக்கள் மடக்கி பிடித்துள்ள நிலையில், பொது மக்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் அங்கு இடம்பெற்ற சம்பவம் என்ன..?
தற்போது கடற்படையினருடைய நிலைப்பாடு எப்படியிருக்கின்றது..? மன்னார் மாவட்டத்தினுடைய தற்போதைய சூழ்நிலை எப்படியிருக்கின்றது..? போன்ற விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் லங்காசிறி செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்துள்ளார்.