மீண்டும் அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த்! 

207

images

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருந்த போது குடும்பத்தினருடன் திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.

அங்கு 2 மாதங்கள் ஓய்வு எடுத்தார், அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

கடந்த ஜூலை மாதம் சென்னை திரும்பிய அவர் 2.0 படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டு நடித்து வந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அங்கு மருத்துவமனையில் சில நாட்கள் அவர் தங்கி இருந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE