அஜித் நடித்த படங்களில் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்ட படம் வீரம். இந்த படத்தை தொடர்ந்து அஜித், சிவாவுடனேயே வேதாளம், தல 57 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
வீரம் படத்திற்கு வசனம் எழுதிய பரதன் தான் தற்போது விஜய்யின் பைரவா படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் பரதன் அண்மையில், பைரவா படத்தின் கதையை முதன்முதலில் விஜய்யிடம் சொல்ல நான் சென்றபோது, வீரம் படத்தின் வசனங்களுக்கு விஜய் பாராட்டு தெரிவித்தார். வீரம் பட வசனங்களை விஜய் சிலாகிச்சுப் பேசியது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என பரதன் பேசியுள்ளார்.