கற்பழிப்பு என்று பலவிதங்களில் செய்திகள் வந்துள்ளன. தினமும் இந்தியாவில் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் செய்திகள் வெளியிட்டு ஆர்பாட்டம் செய்யப்பட்டுள்ளது. அப்பிரச்சினை, அனைத்துலகப் பிரச்சினையாக்கப் பட்டுள்ளது. ஒரு அங்கில பெண்மணி இதைப்பற்றி குறும்படம் எடுத்து இந்தியர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் போன்று சித்தரித்துக் காட்டினர். கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராயும் போது, பல காரணங்கள் அலசப்பட்டன. இருப்பினும், ஒட்டு மொத்தமாக ஆண்கள் தாம் காரணம் என்று ஆண்கள் தான் காரணம் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. பெண்கள் ஆபாசமாக ஆடை அணிகின்றனர் என்று சொன்னால் கூட, ஹா, இதெல்லாம் எங்கள் உரிமை, நாங்கள் எப்படி ஆடை அணிய வேண்டும், எதை, எப்படி எல்லாம் அணிய வேண்டும், என்பது பற்றி யாரும் தீர்மானிக்க முடியாது, நாங்கள் தான் தீர்மானிப்போம் என்றெல்லாம் கூறியுள்ளனர். பற்பல வாத-விவாதங்களும் நடந்துள்ளன. நடிகை முதல் ஊடகப்பெண்பெண்மணிகள் வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர்.
தில்லி மெட்ரோ ரெயிலில் குடித்து கலாட்டா செய்த இளம்பெண்கள்: இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரெயிலில் 4 இளம்பெண்கள் வாலிபர் ஒருவரை சண்டைக்கு இழுத்த சம்பவம் வீடியோ வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[1]. சர்வதேச மகளிர் தினம் 8-03-2016 அன்று கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தன்று பெண்களுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அன்று மாலை டெல்லி மெட்ரோ ரெயிலில் 4 இளம்பெண்கள் பயணம் செய்துள்ளனர்[2]. அவர்கள் . 20-25 வயதுகளில் இருப்பது போன்று நாகரிகமான உடைகளில் காணப்பட்டனர் அனைவரும் குடிபோதையில் இருந்துள்ளனர்[3]. அப்போது ரெயிலில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை சண்டைக்கு இழுத்தனர். மேலும் அவரை காது கூசும் அளவுக்கு தகாத வார்த்தைகளால் திட்டினர். அதிலும் ஒரு மதுபோதையில் இருந்த ஒரு பெண்ணை மற்ற மூன்று பெண்களால் கட்டுப்படுத்த முடியவில்லை[4]. நியூட்டனின் மூன்றாவது விதி பாலியல் ஈர்ப்பில் கூட சமமாகத்தான் வேலை செய்யும் போலிருக்கிறது. ஆண்கள் குடித்து கலாட்டா செய்வார்கள் என்பதில்லை. எங்களுக்கும் உரிமைகள் உள்ளன. அதனால் நாங்களும் குடித்து கலாட்டா செய்வோம் என்ற பாணியில் அவர்கள் நடந்து கொண்டார்கள். இதைக் கண்டு அங்கிருந்த ஆண்கள் அதிர்ச்சியாகி, செய்வதறியாமல் திகைத்து நின்றனர்[5]. இளம் பெண்கள் என்பதால், சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.
இந்நிகழ்ச்சியின் வீடியோ பரவி வருகிறது: இந்த சம்பவத்தை ரெயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் விடீயோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்[6]. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். டெல்லி மெட்ரோ ரெயிலில் நடந்த இந்த சம்பவம் பெண்களை தலைகுனிய வைத்துள்ளது. வீடியோவை பார்த்த பலரும் அந்த பெண்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[7]. பெற்றோர், மற்றோர், உறவினர் முதலியோர், இனி பெண்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி சீரியசாக யோசிப்பர் என்பது திண்ணம். இதைப் பற்றி தில்லி டிவி-செனல்கள் கண்டுகொள்ளம்மல் இருப்பதும் வியப்பாக இருக்கிறது. 8-03-2016 அன்று பர்கா தத் என்ற ஊடகக்காரர் ஹன்னை யாரோ மிரட்டுகிறார்கள் என்று போலீசிடம் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
குடித்து வந்த பெண் போலீஸ் ஷ்டேசனிள் கலாட்டா [11-02-2016]: சென்ற மாதம், இதே போல, ஒரு இளம் பெண், தனது ஆண்-நண்பனுடன் காரில் சென்றபோது, ஒரு பைக்குடன் மோதிய போது கலாட்டாவில் ஈடுபட்டாள். ராஜிவ் சௌக் மெட்ரோ ஸ்டேஷன் கதவு எண் ஏழு அருகில் விபத்து நிகழ்ந்தது. காரில் வந்த அப்பெண் ஆண்-நண்பனுடன் சேர்ந்து பைக்கில் வந்த பையன்களை அடிக்க ஆரம்பித்தாள். போலீஸார் கேட்டபோது, அவர்களையும் அப்பெண் திட்ட ஆரம்பித்தாள். அப்பொழுது, அப்பையன்கள், அப்பெண் குடித்திருப்பதாகக் கூறினர். சுமார் 3 மணி நேரம், போலீஸார் மற்றும் அருகில் இருந்த மருத்துவமனையின் டாக்டர்கள் முதலியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தரக்குறைவாக பேசினாள். போலீஸ் ஷ்டேசனிலும் அவ்வாறே அடந்து கொண்டாள்[8]. வாக்குமூலம் வாங்கும் போது, பேப்பர்களைப் பிடிங்கி கிழித்து எரிந்தாள். பிறகு போலீஸார் அப்பெண்ணை கைது செய்தனர்[9].
தமிழகத்து மாணவிகளின் நிலை: தில்லியில் தான் இந்நிலை என்பதில்லை, தமிழகத்து மாணவிகளும் குடிப்பதில் ஆண்களுக்கு நிகராகவே உள்ளனர். கோவையில் பள்ளி மாணவி மது குடித்து [ஜுலை 2015], தள்ளாடி கலாட்டா செய்துள்ளதும்[10] தஞ்சையில் இன்னொரு இளம்பெண் மது குடித்துவிட்டு ரோட்டில் போவோர் வருவோரை கலாட்டா செய்ததும் அரங்கேறி இருக்கிறது. நவம்பர் 2015ல் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நான்கு மாணவியர் குடித்து மயங்கி விழுந்துள்ளனர்[11]. ஒரு மாணவியின் பிறந்த நாள் விழா பார்ட்டி என்று பிரியாணி, மது என்று சாப்பிட்டு குடித்துள்ளனர்[12]. தேனி அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடந்த ஆகஸ்ட்.3-ம் தேதி, 2015 தேனி போலீஸ் எஸ்.பி மகேஷிடம் மனுக் கொடுத்துள்ளார்[13]. அதில், ‘‘என் மனைவி தினமும் மது குடிக்கிறார். குடிக்காமல் அவர் தூங்குவதில்லை. மதுவுக்கு அடிமையான மனைவியின் உடல் நிலை பாதித்துள்ளது. நீண்டகாலமாக முயற்சி செய்தும் என்னால் மீட்க முடியவில்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது. என் மனைவியை குடியில் இருந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்[14]. இவை எல்லாம் ஒரு சோற்றுப்பதம்தான். வெளியில் தெரியாமல் எத்தனையோ இருக்கின்றன!
மங்களூர் பப் விவகாரத்தை எதிர்த்த ஊடகங்கள், இப்பொழுது குடியை எதிர்ப்பதேன்?: 2009ல் மங்களூர் பப்பில், இளம் பெண்கள் குடித்து, ஆடிய போது, ஶ்ரீராம் சேனா இளைஞர்கள் எதிர்த்தனர், ஆர்பாட்டம் செய்தனர், மறுத்தபோது, குடித்து, ஆடிய இளம் பெண்களை விரட்டியடித்தனர். ஆனால், அப்பொழுது, எல்லோருமே அட்தை எதிர்த்தனர். இந்திய தாலிபன்கள் என்று ஶ்ரீராம் சேனாவை தாக்கி, குடித்து, ஆடிய இளம் பெண்களை ஆதரித்தனர். அதாவது, இளம் பெண்கள் குடிப்பது, குடித்து-ஆடுவது முதலியன அவர்களது உரிமைகள், அவற்றை யாரும் கேட்கமுடியாது என்றெல்லாம் விவாதித்தனர். ஆனால், இப்பொழுதோ, குடிப்பதை எதிர்க்கின்றனர். நவீன கால கொண்டாட்டங்களின்போது பெண்களிடம் மது அருந்தும் பழக்கம் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அலுவலக பார்ட்டியில் இவர்களுக்கு மது அறிமுகம் ஆகி வளர்ச்சி அடைந்து வருகிறது. ‘மதுவில் என்னதான் இருக்கிறது?’ என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சில பெண்கள் மது அருந்தத் தொடங்குகின்றனர் என்பதிலை, தமிழ் சினிமாக்களில் ஏற்கெனவே குடித்து ஆடும் காட்சிகள் கடந்த 40 ஆண்டுகளாக அரங்கேறியுள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளம்பெண்கள் வெளிநாடு சென்று, வார இறுதியில் மது அருந்துவது ஒரு பழக்கமாக இருக்கிறது என்பதில்லை, இந்தியாவிலும் குடிக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறு, மது அருந்தக் கற்றுக்கொண்ட இளம் பெண்கள், தமிழ்நாடு திரும்பிய பின்னரும் பழக்கத்தை, விட முடியாமல் அடிமையாகிக் கிடக்கின்றனர். பணிபுரியும் பெண்களில் பெரும்பாலானவர்கள் ஹாஸ்டல்களில் தங்கியிருப்பதால் மது அருந்தும் சுதந்திரம் எளிதாகக் கிடைக்கிறது. பெருநிறுவனங்களில் உயர் அதிகாரிகளுடன் பணியாற்றும் பெண் செயலாளர்கள் மற்றும் டீம் லீடர்களாக இருக்கும் பெண்களில் பலர் மதுப் பழக்கத்துக்கு ஆளாகி உள்ளனர். 80 சதவிகித பெண்கள் மது குடிப்பது, அவர்கள் குடும்பத்துக்குத் தெரிவதில்லை.