விபத்தல்ல கொலை? ஆதங்கத்துடன் மாவையிடம் முறையிடும் யாழ் பல்கலை மாணவர்கள்

251

jjjj

பல்கலைக்கழ மாணவர்கள் உயிரிழப்பிற்கு சரியான சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவை சேனாதிராஜாவிடம் தெரிவித்துள்ளார்கள்.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலை வளாகத்தில் ஒன்றுகூடி உள்ளனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு மூத்த அரசியல்வாதியான மாவை சேனாதிராஜா திடீரென விஜயம் செய்துள்ளார்.

இவரை சூழ்ந்து கொண்ட குறித்த மாணவர்கள் இது விபத்து அல்ல, இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும், இதற்கு சரியான தீர்வு தரவேண்டும் என்றும் ஆதங்கத்துடன் கூறினார்கள்.

SHARE