நேற்று திடீரென வாள்வெட்டுடன் சம்மந்தப்பட்டவர்களை பிடிப்பதற்காக அதிரடியாக தமிழ் போலீசார் யாழில் வலம்வந்தமையும் அவர்கள் ஊடகங்களின் வீடியோக்களுக்கு முகம் கொடுத்தமையும் சினிமா பாணியில் இளைஞர்களை வழிமறித்து விசாரித்தமையும் ஊடகங்களில் நேற்று வெளியாகியிருந்தன .
இதன் தொடர்ச்சியே நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரையும் பறித்தது என நம்பத்தகுந்த வடடாரங்கள் தெரிவிக்கின்றன .
அதாவது நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த வலம் வரும் போலீசார் யாழ் குலப்பிட்டி பகுதியில் வாள்வெட்டுடன் சம்மந்தப்படடவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலரை மறித்து விசாரித்த போது வேறு சிலர் அங்கிருந்து பயத்தில் ஓடட்டும் பிடித்தனர் .
இந்நிலையில் யாழ்ப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு மாணவர்கள் அவ்வழியால் வந்தபோது அந்த வலம் வரும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட துப்பாக்கி சூட்டினை கேட்டு அச்சமடைந்த நிலையில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார் அதனால் தான் இந்த விபத்து நடந்துள்ளது என ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர் .
இன்னொரு சாரார் ,
விபத்தில் சிக்கி இறப்பு நேர்ந்தால் அந்த மாணவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் சேதமடையவில்லையே ஏன் ?என வினா எழுப்புகின்றனர் .
சிலர் ,
விபத்து நடந்தால் அந்த இடத்தை இதுவரையில் யாழ்ப்பாண போலீசார் மூடி வைத்ததில்லை .நீதிவான் வந்து பார்த்ததும் மக்கள் பாவனைக்கு விட்டு விடுவார்கள் .ஆனால் குலப்பிட்டி சந்தியிலிருந்து வங்கிவரை இன்னமும் வேதி மூட காரணம் என்ன ?போலீசார் இதில் சம்மந்தப்பட்டுள்ளமையை மக்களிடமிருந்து மறைக்கவா ?
நேற்று வளம் வரும் பொலிஸாரின் தீவிர படத்தால் ஏற்பட்ட விபத்துதான் இது .அதனால் அந்த போலீசாருடன் யாழ் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களோடு இந்த மாணவர்களையும் தொடர்புபடுத்தி தாம் தப்ப வழி தேடுவதாக சிலர் கூறுகின்றனர் ?
விபத்துக்குள்ளான மோட் டார் சைக்கிள் மூடப்படடமைக்கான மர்மமும் இன்னமும் விளங்கவில்லை .
சற்று முன்னர் யாழ்போலிஸ் DIG வைத்தியசாலைக்கு சென்று வந்துள்ளதாக தெரிய வருகிறது .
எது எவ்வாறாயினும் போலீசார் எதோ ஒன்றை மறைக்க முயட்சிப்பது தெரிகிறது .இனி சட்டம் தான் பதில் சொல்லவேண்டும் .