திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி
அவர்களை நேரடியாக சந்தித்த எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தனது கவலையை
தெரிவித்ததோடு இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்
கொண்டார்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விசேட பொலிஸ்
குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவத்தோடு
தொடர்புடைய போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை
எடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொள்ளுகிறது. இச்
சம்பவம் தொடர்பில் இரா. சம்பந்தன் அவர்கள் பொலிஸ் மா அதிபரோடும் தொடர்பு கொண்டு இச்
சம்பவம் தொடர்பில் தனது கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்ததோடு துரித கதியில்
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தேசிய கூட்டமைப்பானது தமது பிள்ளைகளை இழந்து துயரில் வாடும் குடும்பத்தாருக்கும் உற்றார்
மற்றும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.
யாழ்ப்பாண மாவட்டம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் அசாதாரணமாக இடம்பெற்ற விபத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
குறித்த மாணவர்கள் இருவரும் வேகமாக உந்துருளியில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இரவு 11.30 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு வேகமாகச் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்களை காவல்துறையினர் மறித்துள்ளனர்.
காவல்துறையினர் மறித்தும் நிற்காதவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கருகில் வசிக்கும் மக்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், விபத்தில் காயப்பட்ட மாணவர்களை காவல்துறையினரின் வாகனத்திலேயே உடனடியாக வைத்தியசாலைக்குக் சொண்டுசென்றனர் எனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் அளவெட்டி கந்தரோடையைச் சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (24) என்பவரும் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன்(23) என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகப் பிரிவில் கல்வி கற்று வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த இருவரினதும் சடலங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் சடலங்களை யாழ்ப்பாண பிரதான நீதிமன்ற நீதவான் சதீஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் இது விபத்தா அல்லது கொலையா என்ற ரீதியில் விசாரணையை முன்னெடுத்து வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.