சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட தினத்தில், அண்மையில் தற்கொலை செய்து கொண்ட இராணுவ புலனாய்வுப் பிரிவு சார்ஜன்ட் மேஜர் கேகாலையில் அமைந்துள்ள வீட்டில் தங்கியிருந்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

லசந்த விக்ரமதுங்கவை தாமே கொலை செய்ததாகவும், கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரேமானந்த உதலாகம என்ற புலனாய்வு உத்தியோகத்தருக்கு கொலையுடன் தொடர்பு கிடையாது எனவும் கடிதம் எழுதி வைத்து விட்டு அண்மையில் கேகாலையில் அமைந்துள்ள வீட்டில் ஜயமான்ன என்ற சார்ஜன்ட் மேஜர் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க அத்திடிய பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலை இடம்பெற்ற தினத்தில் கொலை செய்ததாகக் கூறி அண்மையில் தற்கொலை செய்துகொண்ட ஜயமான்ன என்னும் ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் கேகாலையில் உள்ள வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
தொலைபேசி இலக்கங்களின் ஊடாக புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ள