த்ரிஷாவின் கணவர் இவரா!

220

கர்ஜனை படத்தில் த்ரிஷாவின் கணவராக நடிக்கிறார் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் அமித் பார்கவ். பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் அமித் பார்கவ் புதுமுகம் சுந்தர் இயக்கும் கர்ஜனை படத்தில் த்ரிஷாவின் கணவராக நடிக்கிறார். கர்ஜனை பொலிவுட் படமான என்.எச். 10 படத்தின் ரீமேக் ஆகும்.

இந்தியில் அனுஷ்கா சர்மா நடித்த கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். அவரின் கணவராக அமித் நடிக்கிறார். வில்லனாக வம்சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

த்ரிஷாவுடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது உண்மை தானா என்பதே எனக்கு இன்னும் புரியவில்லை. படத்தில் நடித்து முடித்து திரையில் பார்க்கும் வரை நம்ப முடியாது என்கிறார் அமித்.

கர்ஜனை படப்பிடிப்பு துவங்கிவிட்டது. த்ரிஷா இல்லாமல் ஒரு நாள் ஷூட்டிங் நடந்தது. அன்று அவரது டேட்ஸ் கிடைக்கவில்லை. அவரின் டேட்ஸ் கிடைத்தவுடன் ஷூட்டிங் மீண்டும் நடக்கும் என்று அமித் தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைக்காட்சி தொடரில் என் நடிப்பை பார்த்ததால் என்னை ஆடிஷன் இல்லாமலேயே தேர்வு செய்துவிட்டனர் என்று அமித் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.amit-bargav

SHARE