மாணவர்கள் படுகொலை – வடக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

242

கடந்த 20ம் திகதி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள்இருவர் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டமையைக்கண்டித்து எதிர்வரும்-25ம் திகதிகாலை-06 மணி முதல் மாலை-06 மணி வரை வடக்குமாகாணத்திலுள்ள சகல வர்த்தக நிறுவனங்கள், வியாபார நிலையங்கள் அனைத்தையும்பூட்டி, பாடசாலைகள், நீதிமன்றங்கள் உட்படஅலுவலகங்கள் அனைத்தையும்புறக்கணித்து, போக்குவரத்துச் சேவைகளையும் புறக்கணித்து ஒட்டு மொத்தமாகவடக்கில் ஒரு பூரண ஹர்த்தால் நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளைநாங்கள்பகிரங்கமாக முன்வைக்கின்றோம் என யாழ்.மாவட்டத்தின் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளருமான என்.சிறீகாந்தாதெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் , ஜனநாயக மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்),தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ,அகில இலங்கைமக்கள்முன்னணி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்து குறித்த ஹர்த்தாலுக்கான அழைப்பைவிடுப்பதாகவும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் அரசியல் கட்சிகள் அவசர அவசரமாக ஒன்று கூடியிரு ந்தன. இதன் போது மாணவனின் கொலையை கண்டித்து வடக்குமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு ஒன்றை மேற்கொள்ள அழைப்பு விடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்னர் குறித்த முடிவை அறிவிக்கும் பத்திரிகையாளர்சந்திப்பு ஒன்று யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் எஸ்.குலநாயகம்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.சிறிதரன், ஈ.சரவணபவன், வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள்தவிசாளர் எஸ்.சுகிர்தன்,  ரெலோவின் செயலாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, உபதலைவர் ஹென்றி மஹேந்திரன், நிதி செயலாளர் கே.என்.விந்தன் கனகரத்தினம், தேசியஅமைப்பாளர் எம்.கே.சிவாஜிங்கம், யாழ். மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்ர்ரர், புளொட் அமைப்பின் செயலாளர் நாயகம் சதானந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர்சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக சுகு சிறிதரன், உறுப்பினர் எஸ்.மோகன், தமிழர் விடுதலைக்கூட்டணி நிர்வாகச் செயலாளர் எஸ்.சங்கையா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் யாழ். ஊடக அமையத்தில்  ரெலோவின் செயலாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தலை­மை­யில்  இடம்பெற்ற விசேடஊடகவியாலாளர்கள்சந்திப்பிலே கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த இருபதாம் திகதி இரவு வேளை பொலிஸாரால் இரு பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.இந்த கொலைகள் தமிழ் மக்கள் மீது கட ந்த காலம் தொட்டுதொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலைகளின் தொடர்ச்சியாகவே பார்க்கின்றோம். இலங்கையில் மாறி மாறி வரும் ஆட்சியாளர்களின் கீழ் தமிழ் மக்கள் படுகொலைகளை எதிர்நோக்கியவண்ணமே வருகின்றனர். அரச பயங்கரவாதம் தமிழர்களை அடக்கி ஆள்வதற்கு இவ்வாறான படுகொலைகள் மூலம் தொடர்ந்து முயற்சித்த வண்ணமே உள்ளன. ஆயினும் இனிமேலும்தமிழர்கள் மீதான படுகொலைகளை அனுமதிக்க முடியாது என்பதில் எமது மக் கள் உறுதியாக உள்ளனர். மக்களுடைய ஒட்டுமொத்த வெளிப்பாடாக நாளைய தினம் இடம்பெறவுள்ள ஹர்த்தால்இருக்கும் என நாம் நம்புகின்றோம்.

இதற்கு பயணிகள் போக்குவரத்து பேரூந்து சங்கங்கள், மற்றும் வணிகர் கழகங்கள், பொது அமைப்புக்கள், சங்கங்கள் என அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந் நிலையில் வர்த்தகர்கள்அனைவரும் தமது கடைகளை நாளைய தினம் பூட்டி, ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை தரவேண்டும்.

இதே போன்று அரச பணியாளர்கள், வங்கி நிறுவனங்கள் என சகல திணைக்களங்களும் மாணவர் கொலையை கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இடம்பெறும் ஹர்த்தாலுக்கு பூரணஆதரவு வழங்க வேண்டும். தமிழர்கள் மீது ஒவ்வொரு ஆட் சியாளர்களின் காலங்களில் அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை ஒவ்வொன்றும் தமிழ் மக்களின் உயிர்களை பறித்த வண்ணமே உள்ளன. ஆயுதம் தாங்கிய பொலிஸார் வீதிகளில் நின்று பல்கலைக்கழக மாணவர்களை துப்பாக்கியால் சுடுவது என்பதுசாதாரணமாக கருத முடியாது.

எனவே மாணவர்கள் சுடப்பட்டதை கண்டித்தும் அவர்களுடைய கொலைக்கு நீதி கோரியும் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பும் பூரண ஆதரவு வழங்க வேண்டும் எனஅழைப்பு விடுக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய ஹர்த்தால் அழைப்பிற்கு யாழ்ப்பாணம் வணிகர் கழகமும் அதனோடுஇணைந்தவகையில் யாழ். மாவட்டத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் மற்றும் வடக்கின்ஏனைய பிரதேசங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்ற வணிகர் கழகங்களும் தங்கள்ஆதரவைத்தெரிவிக்க முன்வந்திருக்கின்றன. அத்துடன் பல பொது அமைப்புக்களும்எங்களுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதுபூரணமான ஆதரவும் எங்களுக்குக் கிடைக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.அத்துடன் அனைத்துத் தமிழ்மக்களும் ஹர்த்தாலுக்கான ஆதரவை வழங்கவேண்டுமெனவும்நாம் எதிர்பார்க்கிறோம்.

அரச பயங்கரவாதம் மீண்டும் வடக்கு மண்ணில் தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது என்றதீர்மானத்துடனும், வைராக்கியத்துடனும் தான் எமது மக்கள் சார்பாக ஹர்த்தால்அழைப்பைவிடுக்கின்றோம் என்றார். இந்த ஊடக சந்திப்பில் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

unnamed-8

SHARE