தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நிலையங்களில் விசேட சோதனை

247

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் மற்றும் தலவாக்கலை ஆகிய நகரங்களுக்கு சென்ற நுவரெலியா மாவட்ட நுகர்வோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனைத்து வியாபார நிலையங்களுக்கும் சென்று அங்கு இருக்க கூடிய பொருட்களின் தரம் மற்றும் பொருட்களின் விலைகள் காட்சிப்படுத்தல் தொடர்பிலான விசேட சோதனையை இன்று மேற்கொண்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ் முல்ல அவர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க மேற்படி நுகர்வோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இவ்வாறு சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்தோடு பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமல் இருந்த வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, அவர்களுக்கு தெளிவூட்டலும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-24 625-0-560-320-160-600-053-800-668-160-90-25 625-0-560-320-160-600-053-800-668-160-90-26 625-0-560-320-160-600-053-800-668-160-90-28

 

 

 

 

SHARE