சட்டவிரோதச் செயற்பாடுகளை ஒழிக்க நீதவான் அதிரடி நடவடிக்கை!

206

images

அண்மைக்காலமாக மட்டக்களப்பு நகரில் அதிகரித்துக் காணப்படும் கலாசாரச் சீரழிவு உட்பட சட்டவிரோதச் செயற்பாடுகளைக் ஒழித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக இளைஞர், யுவதிகளைக் கொண்ட குழுக்களை நியமிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா பணித்துள்ளார்.

சட்ட உதவி ஆணைக்குழு, சூரியா பெண்கள் அமைப்பு, சமுதாயச் சீர்திருத்தப் பிரிவு, சிறுவர் நன்னடத்தைப் பிரிவு ஆகியவற்றுக்கே திங்கட்கிழமை(24) நீதவான் இவ்வாறு பணித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம், போதைவஸ்துப் பாவனை, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை நகரில்அதிகரித்துக் காணப்படுகின்றன.

இச்செயற்பாடுகளை ஒழிப்பதற்கு மேற்படி நடவடிக்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 9பேர் பாலியல் தொழில் நிலையம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE