இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனமடுவ தர்மபால பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டிலேயே பாலிதவின் மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் பழுகஸ்சந்தியில் பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனமடுவ நகரத்தில் உள்ள கடையொன்றில் வேலை செய்யும் ஊழியரான தென்னகோண் முதியன்செலாகே காமினி வன்னிநாயக என்ற 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.