கொழும்பு நகரின் வீதிகளில் வாகனத்தை நிறுத்துபவர்களிடம் பணம் அறவிடுவதற்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

211

z_p06-vehicle-01-u

கொழும்பு நகரத்திற்கு வரும் வாகன சாரதிகள் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினைகள் இரண்டு உள்ளன.

அதில் ஒன்று போக்குவரத்து நெருக்கடி மற்றும் வாகனத்தை நிறுத்திக் கொள்வதற்கு உரிய இடம் இல்லாமையாகும். இடம் ஒன்றை தேடி வாகனத்தை நிறுத்தினால், எந்தவித பொறுப்பும் இன்றி சிலரால் பணம் அறவிடப்படும். பற்றுச்சீட்டு ஒன்றும் வழங்கப்படாத நிலையில் அவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

பல சந்தர்ப்பங்களில் வாகனத்தை அவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டு செல்ல ஆயத்தமாகும் போதே பணம் அறவிடுபவர் அவ்விடத்திற்கு வருவார். குறைந்த பட்சம் வாகனத்தை திருடி சென்றால் அங்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறுவதற்கு சாட்சி ஒன்று இதுவரை கிடைத்ததில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு நகரங்களில் சில பகுதிகளில் வாகனங்களை நிறுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் அதற்காக பற்று சீட்டு ஒன்று வழங்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டது. எப்படியிருப்பினும் அந்த சேவையும் முழுமையான மாற்றம் ஒன்றையும் மேற்கொள்ளவில்லை.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக கொழும்பு நகர சபை ஆரம்பித்த இந்த வேலைத்திட்டத்தில் ஆரம்ப காலங்கள் வாகனத்தை நிறுத்தி வைக்கப்பட்டதுடன் வெளியேறும் போது பற்று சீட்டு ஒன்று வழங்கப்படும் நடவடிக்கை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் தற்போது வரையில் அந்த சேவை நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. அது நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இயந்திரம் ஒன்று வாகனம் நிறுத்தி வைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பொருப்பட்டுள்ளது. அவ்வாறான இடங்களில் வாகனங்களை நிறுத்தும் போது, குறித்த இயந்திரத்திடம் சென்று பணம் செலுத்தி பற்றுச்சீட்டொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும். முதலில் அந்த இடத்தில் எத்தனை மணித்தியாலங்கள் வாகனம் நிறுத்தி வைக்கப்படும் என்பதனை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வாகனம் நிறுத்தி வைக்கப்படும் நேரம், வாகனத்தின் இலக்கம் மற்றும் வாகன ரகத்திற்கான தகவல்களை இயந்திரத்திடம் வழங்குவதோடு அதற்கான பணத்தை தாள்கள் ஊடாக அல்லது Touch அட்டைகள் ஊடக செலுத்த வேண்டும்(எதிர்வரும் காலங்களில் தொலைப்பேசி ஆப் ஒன்றின் ஊடாக பணம் செலுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது.

நாம் எதிர்பார்த்த நேரத்தை விடவும் வாகனத்தை அந்த இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருந்தால் அதற்கான நேரத்தை குறிப்பிட்டு பணம் செலுத்தி பற்றுசீட்டு பெற்றுக் கொள்வது நமது கடமையாகும். அவ்வாறு மேற்கொள்ளாத சந்தர்ப்பத்தில் தண்டப்பணம் ஒன்றை அறவிடுவதற்கான நடவடிக்கையும் குறித்த இயந்திரத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு நகர சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான 50 இயந்திரங்கள் கொழும்பில் முக்கிய நகரங்களில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE