கம்பளை கல்வி வலயதிற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ இந்து ஆரம்ப பாடசாலையில் 2016 ஆம் ஆண்டிற்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பாராட்டு விழா பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி எம்.இந்துராணி தiலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண விவசாய இந்து கலாச்சார தோட்ட உட்கட்டமைப்பு தமிழ் கல்வி அமைச்சர் கௌரவ மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களுடன் இணைந்து மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜரட்னம் மற்றும் உடபலாத்த பிரதேச சபை உறுப்பினர் செல்லமுத்து, மத்திய மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு.சதிஸ் மற்றும் கல்வி பனிமனை உத்தியோகத்தர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.