சிங்கள இனத்தவர் மீது நடத்தப்பட்டால் அதனை இனவாதமாக அல்லது ஆட்சிக்கு எதிராக திசைதிருப்ப முடியும் இதற்காகவே ஒவ்வோர் செயலும் திட்டமிட்டுஅரங்கேற்றப்பட்டுள்ளது

289

 

கடந்த வியாழன் அன்று யாழில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ்த் தலைமைகள் குறித்த விடயம் தொடர்பில் கண்டனங்களைவெளிப்படுத்தி வந்த வேளையில் அதற்கு மாற்றுக் கருத்துகளும் வந்த வண்ணம் தான் இருந்தன.

625-500-560-350-160-300-053-800-900-160-90

குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் யாழில் அதிரடியாகபொலிஸார் விஷேட சோதனையில் ஈடுபட்டதோடு பலரை கைது செய்திருந்தமை அறிந்த விடயமே.

மரணித்தவர்கள் சுடப்பட வேண்டியவர்களே என்ற கருத்தே தென்னிலங்கை தரப்பில் பலரது வாதமாக இருந்தது மேலும் காரணங்கள் இருந்தமையாலேயே அவர்கள் சுடப்பட்டார்கள் என்றும் வாதங்கள் பரப்பப்பட்டன.

இவ்வாறான வாதங்களுக்கு மத்தியில் பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு இந்த விடயம் சென்றதோடு பொலிஸ் மா அதிபரும் தமது அதிருப்தியை வௌியிட்டார் இவை யாவும் அறிந்த விடயமே.

இந்த பதற்றங்கள் தணியாத நிலையில் தற்போது அதி வேகமாக பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டுகள் இடம் பெற்றுள்ளது. இந்த விடயத்தில் பொலிஸாரை தைரியமாக வெட்டிய கும்பல் வர்த்தகர் ஒருவரை வெட்டாமல் பணத்தை மட்டும் கொள்ளையிட்டு சென்றுள்ளது.

அதற்கான காரணம் அவர்களது இலக்கு பொலிஸார் அதனை திசைதிருப்புவதற்காகவே அந்தப் பணக் கொள்ளை இடம் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

அடுத்தடுத்து இவை நிகழ்ந்து வருவதற்கு பின்னணி எதுவாக இருக்கும் என்பதனை நோக்கும் போது வடக்கை சீரழித்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காகவே என்றும்ஒரு சாரர் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையை பொறுத்தவரை பாதாள உலக கும்பல்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் மன்னர்கள் முதல் அனைவருமே பிரபல்யமாக இருந்தது தெற்கிலேயே இது மறுக்க முடியாத உண்மை என்பது கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கும் போது தெளிவடையும்.

யுத்தம் முடிந்த பின்னர் அந்த நிலை முற்றாக மாற்றப்பட்டு தெற்கில் தலைவிரித்தாடியஅனைத்தும் வடக்கிற்கு குடியேறியது என்பதே உண்மை.

இலங்கையில் இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகள் அதிகம் உள்ள இடங்களில் வடக்கே முதன்மை பெறுகின்றது. இவ்வாறான கெடுபிடிகளுக்கும் இடையில் அன்றாடம் வாள் வெட்டு கும்பல்கள் இலகுவாக வந்து போவது மட்டும் எவ்வாறு என்பது புரியாத புதிரா..??

இன்றைய தினம் பொலிஸ் பாதுகாப்பு யாழில் இருந்த போதும் சர்வசாதாரணமாக வாள் வெட்டுகள் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதுவும் சன நெருக்கடியான பகுதியில்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் வடக்கை சீர்படுத்த வேண்டும் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு சுற்றி வரும் போது அங்கு மட்டும் வாள் வெட்டுகளும் போதை கடத்தல்களும் சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகின்றது.

தற்போது நிகழ்ந்த வாள்வெட்டில் ஈடுபட்டவர் எவரும் உண்மையில் சிக்கப்போவதில்லை ஆனால் அதற்கான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் இது மட்டும் வேடிக்கையான விடயம் தான்.

இவற்றின் பொதுவான இலக்கு வடக்கு அமைதியற்றதாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சில விஷக்கிருமிகள் செய்யும் செயற்பாடே என்பது புரிந்து விடும் ஆனால் அதற்கான நோக்கம் யாது என்பது மட்டும் காலத்திற்கே வெளிச்சம்.

இதேவேளை தற்போது பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் பின்னணி யாழின் அமைதியை குழப்புவதற்காகவே என கூறப்படுகின்றது. தாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று காரணங்கள் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

காரணம் இன்றி இருவர் சுட்டுக்கொல்லப்பட்டு அதனை மறைக்க முயற்சி நடந்தது.

யாழ் பொலிஸார் மீது கோபம் கொண்டது பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்ததோடு பொலிஸார் முடக்கப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான பொலிஸார் சிங்கள இனத்தவர்கள்.

ஏற்கனவே ஓர் சம்பவத்தில் யாழ் முழுவதும் கொந்தளித்துப்போய் உள்ளது இதன் போது பொலிஸார் தாக்கப்பட்டால் இலகுவாக அதற்கான காரணத்தை யாழ் இளைஞர்கள் மீது சுமத்திவிட முடியும் குறிப்பாக அது சிங்கள இனத்தவர் மீது நடத்தப்பட்டால் அதனை இனவாதமாக அல்லது ஆட்சிக்கு எதிராக திசைதிருப்ப முடியும் இதற்காகவே ஒவ்வோர் செயலும் திட்டமிட்டுஅரங்கேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

இதேவேளை இராணுவ கட்டுப்பாட்டில் தற்போதும் வடக்கு இருக்கும் போது அவர்களையும் தாண்டி இலகுவாக இவை அரங்கேற்றப்படுவதன் பின்னணியில் இராணுவமும் இருக்கலாம் என்றும் அவதானிகள் கூறிவருகின்றனர்.

வாள் வெட்டு தாரிகள் திடீர் பிரவேசம் செய்து விட்டு மறைந்து விடுகின்றனர் அதுவும் முக்கியமான நேரத்தில் அவர்கள் வந்து போவது பதற்றம் இல்லாத வேளை பதற்றத்தை தோற்று விக்க அல்லது பதற்றம் ஏற்பட்ட போது மேலும் பதற்றத்தை தூண்டுவதற்காக மட்டுமே.

இவற்றை பார்க்கும் போது வடக்கை சீர்குலைப்பது மட்டுமே சில சதியாளர்களின் திட்டம் என்பது புலப்படுகின்றது எவ்வாறாயினும் வடக்கில் உண்மையான நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.இராணுவம் முழுவதுமாக வெளியேற வேண்டும் அப்போதே வடக்கிற்கு முழு அமைதி கிடைக்கும் என்பதே உண்மை.

அதனை விடுத்து வடக்கை இராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளே இவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் நேர்மையான முறையில் விசாரிக்கப்படுவதோடு வடக்கின் அமைதியை சீர்குலைத்து வரும் சதியாளர்கள் வடக்கில் இருந்து களையப்பட வேண்டும்அப்போதே அமைதியான நகராக யாழ் மாறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

SHARE