படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் யேர்மனியில் நினைவு கூரப்பட்டனர்

217

தாயகத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விஜயகுமார் சுலக்சன் (ஊடகக் கற்கைகள்) மற்றும் நடராஜா கஜன் (அரசறிவியல் துறை) ஆகியோரின் இழப்பு தொடர்பில் ஜேர்மனி பேர்லின் தமிழாலய நிகழ்வில் நினைவு கூரப்பட்டுள்ளது.

மேலும், அவர்களின் திருவுருவப்படத்துக்கு சுடரேற்றி, மலர் தூவி வணங்கப்பட்டு அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

தாயகத்தில் போர்ச் சூழலிலும் தமது கல்வியை முதன்மையாக கொண்டு தொடர்ந்து கடந்த ஆண்டுகளாக சிறந்த உயர்கல்வி மாணவர்களாக திகழ்ந்த இருவரின் இழப்பு மிக்க கொடியதாக இவ் நிகழ்வில் கலந்துகொண்ட பெற்றோர்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90

 

 

SHARE