பிரித்தானியாவில் பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்படுவதற்கு இது தான் காரணமா? அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்!

237

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

பிரித்தானியாவின் லீட்ஸ் மாகாணத்தில் விபச்சாரத்திற்கென்று அரசால் அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்ட நகரமாகும் ஹால்பெக்.

இந்த நகரத்தில் ஏராளமான பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், அதில் முக்கியமாக 40க்கும் மேற்பட்ட பெண்கள் போதை மருந்துக்காகவே இந்த தொழிலில் இறங்கியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அந்த மாகாணத்தில் கடந்த 12 ஆண்டுகளாக விலைமாதாக இருந்து வரும் கெய்லிக் கூறுகையில், பிரித்தானியாவில் உள்ள பல பெண்கள் போதை மருந்துக்கு அடிமையாகியுள்ளதாகவும், அதன் காரணமாகவே இது போன்ற தவறான வழிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு உதாரணமாக தன்னையே எடுத்துக் கொள்ளலாம் என்றும் தன்னுடைய 16 வயதில் தான் போதை மருந்துக்கு அடிமையானதாகவும், இதை தன்னுடைய பெண் நண்பர் ஒருவர் தான் தனக்கும் அறிமுகம் செய்து வைத்தாகவும் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் இதன் செயல்பாடு தன்னை ஈர்த்தாகவும், அதன் பின்னர் போதைப் பழக்கம் அதிகமாகிவிட்டதாகவும், இது தான் தன்னை உயிரோடு வைத்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தனக்கு அழகான மூன்று குழந்தைகள் உள்ளது என்றும் அவர்கள் தங்களுடைய பெற்றோர்கள் வீட்டில் வசிப்பதாகவும் கூறியுள்ளார்.

குழந்தைகளைக் கூட பார்க்காமல் இருந்து விடுவேன், ஆனால் போதை மருந்துக்கான ஊசி போடவில்லை என்றால் அவ்வளவு தான் என கூறியுள்ளார்.

இதற்கு தங்கள் வீட்டில் பணம் தர மறுத்ததால், விபச்சாரத்தில் இறங்கியதாக கூறியுள்ளார்.

தான் மட்டும் இல்லை என்றும் தன்னைப் போல 40க்கும் மேற்பட்ட பெண்கள் போதை மருந்தின் பழக்கத்திற்கு அடிமையானதன் விளைவாகவே தற்போது இங்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்கள் நாள் ஒன்றிற்கு போதைபழக்கத்திற்கு மட்டும் 120 பவுண்ட் வரை செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

625-0-560-320-500-400-194-800-668-160-90-2 625-0-560-320-500-400-194-800-668-160-90-3

 

SHARE