பெண் நிருபருக்கு போலிஸ் உத்தியோகத்தரின் ‘பளார்’ நடந்தது என்ன ?

287

 

பெண் நிருபருக்கு போலிஸ் உத்தியோகத்தரின் ‘பளார்’

நடந்தது என்ன ?

பாகிஸ்தான் பெண் செய்தியாளரை காவலர் ஒருவர் அறைந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கராச்சி நகரில் தேசிய ஆவண பதிவு அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர் ஒருவர் கேமரா முன் பேசிக்கொண்டிருந்த போது, காவலர் ஒருவர் குறுக்கே வந்தார். அப்போது, அவரை ஒதுங்கி செல்லும்படி செய்தியாளர் கூறிக்கொண்டிருந்தார்.

daily_news_6579357385636

ஒரு கட்டத்தில், காவலரை விரட்டி சென்று பேட்டி எடுத்த செய்தியாளர் காவலரை திரும்பும் படி கூறினார். இதில் கோபமடைந்த காவலர் செய்தியாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக செய்தியாளர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

SHARE