ஆவா குழு இந்த குழுவை உருவாக்கியது இராணுவ புலனாய்வுத்துறை மற்றும் இலங்கை இராணுவ உயர் மட்டக்குழு என்பது என்னுடைய கருத்து
ஏனெனில் இன்று ஆவா குழுவில் இணைந்து செயற்படும் அனைவரும் முன்பு இராணுவத்திற்காக புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்,
மூன்று விதமான தமிழ் குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை யாழ்ப்பாண பிரதேசத்தில் இடைக்கால நிர்வாக காலம் முதல் மகிந்த ஆட்சியில் இருந்த காலம் வரையில் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டார்கள், நான்கும் உண்டு அவற்றைப்பற்றி இப்போது வேண்டாம் இப்போது மூன்றை மட்டும் பார்ப்போம்
ஒன்று ஈ.பி.டி.பி இவர்களுடைய வேலை விடுதலை குறித்து பேசும் அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குவது. மற்றும் தமிழ் மக்கள் பயப்படும் படியான கொடூரமான கொலைகளை நிகழ்த்துவது.
மற்றும் இடைக்கால நிர்வாக நடவடிக்கைகளை குழப்பும் முகமாக இலங்கை இராணுவ காவலரான்கள் மீது கைக்குண்டு தாங்குதல் நடத்தி விட்டு அந்த பலியை புலிகள் மீது போடுவது.வெள்ளை வேனில் இவர்களை மிஞ்ச எவராலும் முடியாது இவர்களுக்கான கட்டளைகள் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் மூலமாக நேரடியாக வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அதிகமாக இவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . வழக்குகளை ஒரு கண்துடைப்பிற்காக சிங்கள போலீசார் மேற்கொண்டனர் இருந்தபோதும் இவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க காவல் நிலைய அதிகாரிகள் முன்வரவில்லை. அவர்களிற்கு மேலிடத்தில் இருந்து கட்டளை கிடைத்தபடியால் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இரண்டாவது புளொட் இவர்கள் அனைவருக்கும் இலங்கை இராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டு. இலங்கை இராணுவ அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு.இலங்கை இராணுவத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் வழங்கப்பட்டது. இன்று வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இலங்கை அரசாங்கத்தால் ஆயுதங்களும் இவர்களுக்கு கொடுக்கப்பட்டது இவர்களுடைய வேலை விடுதலைப்புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அனைவரையும் சுட்டுக்கொலை செய்வது இவர்களுடைய பெயரில் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஒரு கண்துடைப்பிற்காக காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்தனர் ஆனால் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை காரணம் இவர்கள் சீருடை தரிக்காத இராணுவம் என்றபடியால்.
மூன்றாவது சமூக விரோதிகள் இவர்கள் பலவிதமான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட படியால் விடுதலைப்புலிகளினால் தேடப்பட்டு வந்தவர்கள். விடுதலைப்புலிகளிற்கு ஒழித்து திரிந்த இவர்களை இராணுவ புலனாய்வுத்துறை சந்தித்து இவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து இவர்கள் செய்யும் சமூக விரோத செயற்பாடுகளை மேலும் ஊக்குவித்து ( கள்ளச்சாராயம். கஞ்சா. கேரோஜீன்.களவு ) விடுதலைப் புலிகளின் செயற்பட்டாளர்களை தங்களிற்கு காட்டிக்கொடுக்கும்படியாக கூறியிருந்தார்கள்.இவர்கள் ஆயுதங்களை தாங்கி தங்களுடைய சமூக விரோத செயல்பாடுகளை மேற்கொண்டது மட்டும் அல்லாமல் விடுதலைப் புலிகளையும் காட்டிக்கொடுத்தார்கள்.
இவ்மூன்று குழுக்களிற்கும் சகல அதிகாரத்தையும் சிங்கள அரசாங்கம் கொடுத்திருந்தார்கள்
ஆனால் இவர்கள் எப்படியான செயற்பாடுகளை செய்தாலும் புலிகளின் பெயரை பயன்படுத்தி செய்ய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கோரிக்கையாக இருந்தது காரணம் மக்கள் மத்தியில் புலிகளைக் குறித்து தப்பான அபிப்பிராயத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது.
இவை அனைத்தும் இடைக்கால நிர்வாக காலத்தில் இருந்து மகிந்த ஆட்சி வீட்டிற்கு போகும்வரை அவர்களுடைய செயற்பாடுகள் நடைபெற்றது.
மீண்டும் புதிதாக நரி வேஷம் தரித்த மைத்திரியின் ஆட்சியில் உலக நாடுகளிற்கு தாங்கள் தமிழ் மக்களிற்கு நல்லது செய்கிறோம் என்பதை காண்பிப்பதற்காக முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சிலவற்றை போலீசாரின் விசாரணைக்கு கொண்டு வந்து சமூக விரோதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்றது .
இவர்கள் கைது செய்யப்பட்டால் தங்களுடைய ரகசியங்கள் அம்பலமாகும் என்பதை அறிந்த இராணுவ புலனாய்வுத்துறை அவர்களை தங்களுடைய பாதுகாப்பில் மறைத்து வைத்தார்கள்.
மீண்டும் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து மக்கள் விடுபடும் சூழ்நிலை உருவாகி வருவதை பொறுக்க முடியாத சிங்கள அரச தலைவர்கள் திட்டமிட்டு மாணவர்களை படுகொலை செய்தது மட்டும் அன்றி தங்கள் மறைத்து வைத்திருந்த சமூக விரோத கும்பல் மூலமாக புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு யாழ்ப்பாணம் இலங்கையில் மிகவும் ஆபத்தான நகரம் இங்கு பாதுகாப்பிற்கு போலீஸ் தேவையில்லை இராணுவம் தான் தேவை என்பதை காண்பிக்கவே இந்த நடவடிக்கைகளை செய்கிறார்கள்
ஆவா குழுவில் இருப்பவர்கள் எல்லாம் தமிழ் உணர்வாளர்களோ இல்லையென்றால் விடுதலைப்புலிகளோ கிடையாது அங்கே இருக்கின்ற ஆவா குழுவில் இருக்கின்ற அனைவரும் சிங்களவனின் வாள்கள் உண்மையான தமிழனின் விந்தில் உருவாகாத முதுகு உடைந்த கோழைகள்
என் அன்பிற்குரிய இளைய தலைமுறையே . என் ஈழத்து உறவுகளே உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சமூகமே ஆவா குழு என்கிற போலியான சமூக விரோதிகளை நம்பாதீர்கள்
எச்சரிக்கையாக இருங்கள்