புதிய அரசியல் அமைப்பு ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக பிளவுபடாத ஐக்கிய இலங்கை உருவாகும்.
ஐக்கிய இலங்கைக்குள் இன, மத அடிப்படையில் பிளவடையாது அனைவரும் ஒன்றிணைந்து வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட உள்ளது.
புதிய அரசியலமைப்பு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்படும். சமஸ்டி அரசாங்கம் என்பதும் ஐக்கிய பிளவடையாத நாட்டையே குறிக்கின்றது.
1997ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிம், சமஸ்டி ஆட்சி முறைக்கான அரசியல் அமைப்பு யோசனைத் திட்டமொன்றையே முன்வைத்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.