கடந்த 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து முழு நாட்டிலும் ஒருவித பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், கொல்லப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி நாடு முழுவது ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது ஒருபுறமிருக்க உயிரிழந்த மாணவர்கள் பலவித திறமைகளை தன்னுள்ளே கொண்டிருந்ததாக தெரிவித்து அண்மைய நாட்களில் சமூக வலைதளங்களில் செய்திகளும் காணொளிகளும் வெளிவந்துள்ளன.
குறிப்பாக சுலக்ஷன் நடித்து வெளியாகியிருந்த நகைச்சுவை குறுந்திரைப்படம். இந்நிலையில், தற்போது கடற்கரையேரத்தில் நண்பர்களுடன் கூடி தனது இனிமையான குரல் வளத்தினால் சுலக்ஷன் பாடல் பாடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இதுவே, சுலக்ஷன் தனது நண்பர்களுடன் இருந்த இறுதி தருணம் என அவரது நண்பர்கள் தெரிவித்து கவலை வெளியிட்டுள்ளனர்.