ஒன்றிணைந்த வீட்டுத் திட்டத்திற்கான உதவி வழங்கி வைப்பு

267

வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்த வீட்டுத் திட்டத்திற்கான 25 விவசாயிகளுக்கு வீட்டு தோட்டம் மற்றும் மேட்டு நில பயிர் செய்கைக்கு தேவையான நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் மின் நீர் இறைக்கும் இயந்திரம், கம்பி போன்ற பெருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வேல்ட் விஷன் நிறுவனத்தால் ஈச்சிலம் பற்று மாவடிச்சேனை, சேனையூர்பற்று பிரதேசங்களை சேர்ந்த 25 குடும்பங்களுக்கே இந்த உதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வருகின்ற மழை காலங்களில் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாகவே இந்த விவசாய குடும்பங்களுக்கு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் ஈச்சிலம் பற்று பிரதேச செயலாளர் மா.தயாபரன், வேல்ட் விஷன் தலைமை முகாமையாளர் இ.பிரகாஷ்குமார் மற்றும் திட்ட இணைப்பாளார் டிலான் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6

 

 

 

 

SHARE