பொருளாதார கொள்கைகள் தொடர்பில் பிரதமர் இன்று விசேட உரை

297

ranil

வரவு செலவுத் திட்ட பொருளாதார கொள்கைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் விசேட உரையாற்ற உள்ளார்.

தற்போதைய அரசாங்கம் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க அடிப்படையாகக் கொண்ட பொருளாதார கொள்கைகள் குறித்து இந்த உரையில் விளக்கம் அளிக்க உள்ளார்.

வரவு செலவுதிட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள பொருளாதார திட்டங்கள் குறித்தும் பிரதமர் தெளிவுபடுத்த உள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு அளிக்கப்பட உள்ள நிவாரணங்கள் குறித்தும் பிரதமர் தகவல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட முன்னதாகவும் பிரதமர், வரவு செலவுத் திட்டம் குறித்து விசேட உரையொன்றை நாடாளுமன்றில் நிகழ்த்தியிருந்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநயாக்க வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார்.

SHARE